சூடான செய்திகள் 1

காலநிலையில் சிறு மாற்றம்

(UTV|COLOMBO)-அடுத்த சில நாட்களில், ஜனவரி 24ம் திகதியிலிருந்து தற்போது காணப்படும் வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற தாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் மாத்தளை மாவட்டத்திலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

 

 

 

Related posts

துப்பாக்கி சூட்டில் 22 வயதுடைய மகள் உயிரிழப்பு

வட மாகாணத்தில் வறட்சி காரணமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி