சூடான செய்திகள் 1

காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும்

(UTV|COLOMBO) நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன்படி மேல் , தென் , மத்திய , சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்  வீசக்கூடும் என்பதால் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

 

 

 

Related posts

பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்-ஜனாதிபதி

விஜயகலா மகேஸ்வரன் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டார்

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு சென்ற அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்

editor