உள்நாடுகாலநிலை

காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையை ஒட்டிய கடற்பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, குறித்தப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், மேற்படி கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, மீன்பிடி மற்றும் கடற்படை சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

1996 உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட வீரர்களை சந்தித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

editor

கோடீஸ்வரர்களை ஏமாற்றிய திலினி பிரியமாலிக்கு விளக்கமறியல்

கனடாவில் இனப்படுகொலை நினைவுச்சின்னம் – இலங்கை கண்டனம்

editor