சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்

(UTVNEWS|COLOMBO) – வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் நாளைய தினம காற்றின் வேகமானது மணிக்கு 70 தொடக்கம் 80 கி.மீ வேகத்தில் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 9 ஆம் திகதிவரை குறித்த கடற்பரப்பில் மீன்படி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலும், மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சட்டவிரோதமான தங்க ஆபரணங்களுடன் இருவர் கைது

இன்று இரவு 10.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்

editor

ஜனாதிபதி மாளிகையில் விசேட இப்தார் நிகழ்வு