உள்நாடுகாலநிலை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் வரை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளை சுற்றி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அந்த அமைப்பு மெதுவாக உருவாகி வடமேற்கு நோக்கி நகரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் இரு தினங்களில் அது நாட்டின் வடபகுதிக்கு அருகில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கைகள்

கடல் பகுதிகளுக்கு,

  • காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரிக்க கூடும் என்பதுடன் அந்த கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படக்கூடும்.

அந்த கடல் பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

  • காங்கசன்துறையிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என்பதால் சில சமயங்களில் சீற்றமாக காணப்படும்.

பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்

வங்காள விரிகுடா கடற்பகுதியில் உள்ள மீனவ மற்றும் கடல் வாழ் சமூகத்தினர் இந்த அமைப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலப்பரப்பைப் பொறுத்தவரை, நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த அமைப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் கணிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related posts

நாட்டின் பொருளாதாரம் எந்த திசையில் உள்ளது என்பது தெளிவாகிறது

2 மாதங்களில் சுற்றுலாத்துறைக்கு 768.2 மில்லியன் டொலர் வருமானம்

editor

தென்னகோனை நான் மறைத்து வைத்திருக்கின்றேனா ? – சாகல ரத்நாயக்க கேள்வி

editor