அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

கார்த்தி பி. சிதம்பரத்துடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு!

பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கார்த்தி பி. சிதம்பரத்தை அன்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தியா பயணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டு விஜயத்தின்போது சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) உறுப்பினரும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (TNTA துணைத் தலைவருமான திருவாளர் கார்த்தி பி. சிதம்பரத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிவகங்கை தொகுதியின் மானகிரியில் இடம்பெற்ற இச்சந்திப்பானது சுருக்கமானதாக இருந்தாலும் மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்ததாக கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான் இந்தியா-இலங்கை பரஸ்பர விடயங்கள் குறித்தும், மேலும் பல முக்கிய விடயங்கள் சார்ந்து இருவரும் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஊடகப்பிரிவு
ஜீவன் தொண்டமான்(பா.உ)

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான உயர் நீதிமன்ற மனுக்கள்

கொரோனாவிலிருந்து மேலும் 37 பேர் குணமடைந்தனர்

சுபீட்சம் ஏற்பட ரணிலின் ஆட்சி தொடர வேண்டும் – எம்.ராமேஷ்வரன் MP