உள்நாடுபிராந்தியம்

காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 4 வயது சிறுமி

காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

புங்குடுதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிறுமி கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அவ்வேளை சிறுமியை அவரது பெற்றோர் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு கொண்டுசென்றபோது, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை (20) சிறுமிக்கு கடும் சுகவீனம் ஏற்பட்ட நிலையில், பெற்றோர் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

அவ்வேளை, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து அறிக்கையிட்டுள்ளனர்.

அதனையடுத்து, சிறுமியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே சிறுமி உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்வு

ஜாலிய சேனாரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்.

விஜயகலா மகேஸ்வரன் விசாரணை ஆணைக்குழுவில்