ஹோமாகம மாற்று வீதியில் இன்று வியாழக்கிழமை (10) காலை காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நுகேகொடைபொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
35 மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவரேனும் ஒருவர் இந்த இளைஞனை வேறொரு பிரதேசத்தில் வைத்து கொலை செய்து பின்னர் சடலத்தை ஹோமாகம மாற்று வீதியில் வீசிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த இளைஞனின் தலையில் வெட்டு காயங்கள் காணப்படுவதாகவும் கழுத்து பகுதி சிவந்து இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், ஹோமாகம மாற்று வீதி இரவு வேளைகளில் ஆள் நடமாட்டம் இன்றி பாழடைந்து இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகேகொடைபொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.