சூடான செய்திகள் 1

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (08) விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இன்றைய விசாரணையின் போது, கென்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கணக்காளர் மேனக ராஜகருணவிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணை நிறைவுக்கு வந்தது.

இதனையடுத்து சில வணிக வங்கிகளின் அதிகாரிகளிடம் சாட்சி விசாரணை இடம்பெற்றது.

பின்னர் வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் 11ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்

10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன

editor

இலங்கை முதலிடத்தில்..!