சூடான செய்திகள் 1

காமினி செனரத்தின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று (13) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதன்போது வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை, எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட ​போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின் போது, கென்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கணக்காளர் மேனக ராஜகருணவிடம் அரச தரப்பு பிரதி சொலிசிஸ்டர் ஜெனரால் சாட்சியம் மேலதிக சாட்சியங்களை பதிவு செய்து கொண்டார்.

 

 

 

 

Related posts

பலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுக்கவுள்ள இலங்கை பாராளுமன்றம்!

 உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு : பெறுமதி 15,000 கோடி ரூபா

249 ஓட்டத்துடன் சுருண்ட நியூஸிலாந்து