உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, “வளமான நாடும் – அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில், நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நேற்று (14) இடம்பெற்றது.
இந்நிகழ்வினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி,
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத்,
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் றிப்கா ஷபீன்,
காத்தான்குடி நகர சபையின் பிரதிமுதல்வர் ஜ.எம். ஜெஸீம் மற்றும் நகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின் கருப்பொருள், சமூகங்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும், வாழ்க்கைச் சூழலைப் பாதுகாக்கும், மேலும் எதிர்காலத்திற்கான நிலையான தொலைநோக்குப் பார்வையை முன்னெடுக்கும் ஒரு நகரத்தை உருவாக்குவதாகும்.
இவ்வேலைத்திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) முதல் எதிர்வரும் சனிக்கிழமை (20) வரை இடம்பெறும்.
-ஊடகப்பிரிவு