அரசியல்உள்நாடு

காத்தான்குடி சுற்றுலா அபிவிருத்தி திட்டம் ஆரம்பம்!

காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட
காத்தான்குடி ஆற்றங்கரை, வீதி மற்றும் அதனை அண்மித்த இடங்களை அபிவிருத்தி செய்து சுற்றுலா பயணிகளை கவரும் பிரதேசமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், குறித்த இடங்களுக்கு நேற்று (05) விஜயம் செய்து பார்வையிட்டார்.

இதன்போது, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர் JP, காத்தான்குடி நகர சபை உறுப்பினர் இ.எம் றுஸ்வின், பாத்திமா பௌண்டேஷன் தலைவர் இக்ராம் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

-ஊடகப்பிரிவு

Related posts

பல கோடி தங்கத்துடன் யாழில் இருவர் கைது [PHOTO]

நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே என்நோக்கம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

ஜனாதிபதி – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்