வகைப்படுத்தப்படாத

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பாராட்டு

(UDHAYAM, COLOMBO) – காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான அரசாங்க வேலைத்திட்டத்தை சர்வதேச சட்டம் தொடர்பான சட்டத்தரணி திருமதி சரணி குணதிலக பாராட்டியுள்ளார்.

தமது உறவினர்கள் காணாமல் போனதன் காரணமாக எதிர்பார்ப்புடன் இருக்கும் தரப்பினருக்கு இதன்மூலம் நீதியை நிலைநாட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

சில தரப்பினர் காணாமல் போனோர் தொடர்பான அலுவலங்களை அமைப்பது தொடர்பில் உரிய தெளிவின்றி செயல்படுகின்றனர்.

இந்த அலுவலகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் காணாமல் போனவர்களுகானது மாத்திரம் அல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.

காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையானது பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதிக்கு மாத்திரமல்ல அதற்கு முன்னர் சமூக முரண்பாடு சிவில் புரட்சிகளில் காணாமல்போனோர் தொடர்பான போன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

“Singapore had set an example of the need for pragmatic  thinking” – Champika Ranawaka

எரி பொருட்களின் விலையில் மாற்றம்.?

தேசிய காப்புறுதி நிதியம் இழப்பீடு