அம்பாந்தோட்டையில் கிரிந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகெம்முல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (09) மாலை 06.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர் கிரிந்த, ஒருகெம்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் உள்ள பயிர்களை வன விலங்குகளிடமிந்து பாதுகாப்பதற்காக தோட்டத்தில் தங்கியிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.