உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி பலி – தந்தை வைத்தியசாலையில்

ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தரம் 2இல் கல்வி பயின்று வந்த 7 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காட்டு யானையின் தாக்குதலால் பலத்த காயமடைந்த அவரது தந்தையும் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (03) காலை 6.00 மணியளவில் தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றிருந்த போது காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

பாடசாலை விடுமுறை நாள் என்பதால் தனது தந்தையுடன் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தபோது, கிராமத்திற்கு வந்த ஒரு காட்டு யானை அவர்கள் இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Related posts

உடரட்ட மெனிக்கே தடம்புரண்டது

இலங்கைக்கு இந்திய அரசாங்கம் தனது பூரண ஆதரவை வழங்கும்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 755 ஆக உயர்வு