வகைப்படுத்தப்படாத

காட்டு யானைத் தாக்குதலில் இருவர் பலி

(UDHAYAM, COLOMBO) – இறக்குவானை – பொதுபிட்டிய – ரஜவத்த பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு 10.00 மணியளவில் அந்த பிரதேசத்தில் தேயிலை தோட்டம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்கள் அதே பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரும், ஆணொருவரும் என தெரியவந்துள்ளது.

அவர்களின் சடலங்கள் தற்போது பொதுபிட்டி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

Related posts

ஹட்டன், நுவரெலியா அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு!

புதிதாக பதிவு செய்வதற்காக 95 கட்சிகள விண்ணப்பம்

‘மோரா’ புயல் – மலையகத்தில் கடும் மழை