கேளிக்கை

காஜல் அகர்வாலின் சமூகப்பணி…

(UTV|INDIA) தமிழில் ரீமேக் ஆகும் இந்தி குயின் படமான பாரீஸ் பாரீஸ் என்ற படத்திலும், ஜெயம் ரவி ஜோடியாக ஒரு புதுப் படத்திலும் நடிக்கிறார் காஜல் அகர்வால். தற்போது அவர் ஆந்திராவில் ஒரு பள்ளியை கட்டிக் கொடுத்து  இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நடிப்பு தவிர, என்னால் இயன்ற  சமூகப் பணியிலும் ஈடுபடுகிறேன்.

ஆந்திரா பகுதியில் அரக்கு என்ற இடத்தில் வசிக்கும் ஆதிவாசி குழந்தைகள், கல்வி கற்றுக் கொள்வதற்கு சரியான பள்ளிக்கூடம் இல்லாமல் கஷ்டப்படுவதை அறிந்து, உடனே அங்கு சென்று பார்த்தேன். பிறகு நன்கொடைகள் பெற்று, அங்கு ஒரு பள்ளியை கட்டினேன். இது மிகவும் சின்ன உதவிதான் என்றாலும், அதன்மூலம் கிடைக்கும் ஆத்ம திருப்தி பற்றி வெளியே சொல்ல முடியாது’ என்றார்.

 

 

 

Related posts

அஜித்துடன் இணையும் நயன்

கொரோனாவிற்கு சவாலாக நித்யானந்தா

இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா