உலகம்

காசெம் சுலேமானீ கொலையினை பென்டகன் உறுதிப்படுத்தியது

(UTV|IRAN) – ஈரானின் புரட்சிகர இராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் சுலேமானீயை கொன்றதை அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் உறுதிப்படுத்தியது.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இச்செய்தி வெளியானது. இத்தாக்குதலில் மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த நடவடிக்கை “மிகவும் அபாயகரமான மற்றும் முட்டாள்தனமானது” என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் தெரிவித்துள்ளார்.

Related posts

பொதுக் கூட்டத்தில் வெயிலால் 13 பேர் உயிரிழப்பு

புதிய மருத்துவமனை 10 நாட்களுக்குள் – சீனா அரசு

கடந்த 24 மணிநேரத்தில் 4,187 கொவிட் மரணங்கள்