10 வாரங்களுக்கும் மேலாக காசா பகுதிக்கு உணவு விநியோகத்தை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியதால், அங்குள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக, பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காசாவில் உள்ளவர்கள் நாளொன்றுக்கு ஒருமுறை மாத்திரமே உணவை பெற்றுக்கொள்வதாக இது தொடர்பில் கருத்து வௌியிட்ட அப்பகுதி வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
காசா பகுதிக்கு எரிபொருள் மற்றும் மருந்து விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியதன் மூலம் காசா பகுதி மக்களின் வாழ்வாதாரம் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.