உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

காசாவை கைப்பற்றுவதற்கான இஸ்ரேல் எடுத்த தீர்மானம் குறித்து இலங்கை அரசு ஆழ்ந்த கவலை

காசா பகுதியின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பான இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் காசா பகுதியில் வன்முறையை மேலும் அதிகரிக்கும் என்றும், அந்தப் பகுதியில் உள்ள மக்களின் துன்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் செயலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உடனடி போர்நிறுத்தத்திற்கு வருமாறு இலங்கை கேட்டுக்கொள்வதாகவும், அனைத்து தரப்பினரும் தங்கள் வேறுபாடுகளை இராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொண்டு நிலையான அமைதியை நிலைநாட்டுவதை நோக்கி நகர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

BOI தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பு

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு

இதுவரையில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 61,621 பேர் கைது