உலகம்

காசாவில் பசி பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்வு – ஐ.நா. அவசர கோரிக்கை

காசா மக்களுக்கு பெருமளவில் நிவாரண உதவிகளை வழங்குமாறும், அங்குள்ள பாலஸ்தீனியர்கள் பட்டினி கிடந்து இறப்பதைத் தடுக்க தினமும் உதவிப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேலின் போரின் போது காசாவில் பட்டினி காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், பசி தொடர்பான ஐந்து புதிய இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

போரின் காரணமாக அங்கு உணவுப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருவதால், பஞ்ச நிலைமை ஏற்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டமும் பிற மனிதாபிமான அமைப்புகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை குழந்தைகள் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

பாதுகாப்பான மற்றும் சீரான முறையில் உதவிப் பொருட்களை விநியோகிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

Related posts

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கினால் 40 பேர் உயிரிழப்பு!

கொரோனா காரணமாக 15 நாடுகளுக்கு கட்டார் தடை விதிப்பு

இங்கிலாந்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்