உலகம்

காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு ட்ரம்ப்பும் உடந்தை – கொலம்பியா ஜனாதிபதி அதிரடி பேச்சு – விசாவை இரத்து செய்வதாக அமெரிக்கா அறிவிப்பு

ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபடுவதாக இஸ்ரேல் அரசுக்கு எதிராக பல்வேறு நாட்டு தலைவர்கள் பேசியிருந்தார்கள்.

ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பேசிய கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ, “காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு டொனால்ட் ட்ரம்ப்பும் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோவின் விசாவை இரத்து செய்வதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது விசா இரத்து செய்யப்பட்டது குறித்து கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலையை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டதற்காக எனது விசா இரத்து செய்யப்பட்டள்ளது.

இது அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

இனிமேலும் ஐநா சபையின் தலைமையகம் நியூயார்க்கில் இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

மற்றொரு பதிவில் டொனால்டு டிரம்பை ‘டொனால்ட் டக்’ என்று கூறி கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ கிண்டல் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சவுதி அரேபியாவில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்தது

வீடியோ | மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் – கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

editor

DNA மரபணுக்கள் மூலம் உருவாகியுள்ள தடுப்பூசி