வணிகம்

காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் அபிவிருத்திகொள்கை கட்டமைப்பிற்கு அமைவாக வடக்கு கிழக்கு பொருளாதார நுழைவாயில் வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பிரதான திட்டங்களில் ஒன்றாக காங்கேசன்துறை துறைமுகம் நிலைபெறா வர்த்தக துறைமுகமாக மறுசீரமைப்பு செய்யப்படுவதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள நிதியை பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தில் தற்போது காணப்படுகின்ற பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் புதிய இறங்கு துறையொன்றை நிர்மாணித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய இறங்கு துறையின் பணிகளை இலங்கை துறைமுக அதிகாரசபையினால் மேற்கொள்வதற்கும் இதற்கு தேவையான கொள்முதல் மற்றும் தொழில்நுட்பங்களை மதிப்பீடு செய்வதற்கான குழுவொன்றை அமைப்பதற்கும் துறைமுகம் மற்றும் கடல் நடவடிக்கைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புதிய Chat Extensionகளுடன் பிரத்தியேகமான தகவல் அனுப்பும் Viber

இலங்கை சில்லறை முதலீட்டு நிலப்பரப்பில் ‘Softlogic Invest’ ஆரம்பம்

நெல் கொள்வனவு வெற்றிகரமாக முன்னெடுப்பு