வகைப்படுத்தப்படாத

கவர்ச்சி பத்திரிகை நிறுவனரின் ‘வயாகரா’ மோதிரம் ஏலத்தில்

(UTV|உலகின் முன்னணி கவர்ச்சி பத்திரிகையான ‘பிளேபாய்’ பத்திரிகையின் நிறுவனர் ஹியூ ஹெப்னர். சொகுசான ஒரு வாழ்க்கையை நடத்தி வந்த இவர், கடந்த ஆண்டு, தனது 91-வது வயதில் மரணம் அடைந்து விட்டார்.

இந்த நிலையில் அவர் பயன்படுத்தி வந்த பொருட்கள், சாதனங்கள் மட்டுமல்லாது ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் ஆகியவை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஜூலியன் நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.அவற்றை அவரது ரசிகர்கள் அதிக தொகை கொடுத்து மகிழ்ச்சியுடன் வாங்கி குவித்திருக்கிறார்கள். இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ:-

ஹாலிவுட் கவர்ச்சிப்புயல் மர்லின் மன்றோவின் அட்டைப்படம் தாங்கி வெளிவந்த ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் பிரதி 31 ஆயிரத்து 250 டாலருக்கு விற்பனையானது. (ஒரு டாலரின் மதிப்பு சுமார் ரூ.70).

‘வயாகரா’ மாத்திரையை மறைத்து வைத்து, தயாரிக்கப்பட்டிருந்த ஹெப்னரின் 14 காரட் தங்க மோதிரம், 22 ஆயிரத்து 400 டாலருக்கு விலை போனது.

ஹெப்னர், ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் கட்டுரைகளை தட்டச்சு செய்வதற்கு பயன்படுத்திய தட்டச்சு எந்திரம், 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 டாலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

அவர் புகை பிடிக்கும் போது பயன்படுத்திய மேலாடை உள்ளிட்ட நிறைய பொருட்களை அவரது ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்திருக்கிறார்கள்.

 

 

 

 

Related posts

Fmr. Defence Secretary Arrested

பாகிஸ்தானிலுள்ள விமான நிலையங்கள் காலவரையறையின்றி பூட்டு

Three die in Medawachchiya motor accident