சூடான செய்திகள் 1

கவனயீனத்தினால் பரிதாபமாக பலியான சிறுவன்…

(UTV|COLOMBO)-நீர்ப்பாசன திணைக்களத்தினால் தோண்டப்பட்டிருந்த பாரிய வடிகால் ஒன்றினுள் விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை பக்கிஎல்ல பொலிஸ் பிரதேசத்திற்குற்பட்ட பக்கிஎல்ல கிராமத்தில் பாதுகாப்பற்ற முறையில் வடிகால் ஒன்று தோண்டப்பட்டுள்ளது.

ஐந்து நாட்களுக்கு முன்பதாக குறித்த வடிகால் தோண்டப்பட்ட போதிலும் அதனை சுற்றி பாதுகாப்பு மதில்களோ வேலிகளோ அமைக்கப்படாதமையின் காரணமாக இந்த விபத்து இடம்பற்றுள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த விபத்தில் மனுஹாச் சங்கல்ப ஏகநாயக என்ற சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பக்கிஎல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை

பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் கொலை வழக்கு- வாஸ் குணவர்த்தனவின் மனு ஒத்திவைப்பு

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினத்தின் 50 ஆவது ஆண்டு பூர்த்தி இன்று