உள்நாடு

கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

(UTV|கொழும்பு) – இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்வது தொடர்பில் நீதிமன்றத்திற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையுத்தரவை மீறாது, மீள் ஏற்றுமதி குறித்து அந்நாட்டின் சுற்றாடல் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இணக்கம் எட்டப்பட்டதன் பின்னர் நகர்த்தல் பத்திரத்தினூடாக நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

எனினும் மீள் ஏற்றுமதி செய்வது தொடர்பில் தமது நிறுவனத்திற்கு ஆட்சேபனை இல்லை என வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஹேலிஸ் ப்றீ ஸோன் நிறுவனம் நீதிமன்றுக்கு இன்று அறிவித்துள்ளது

எனவே இந்த வழக்கை அடுத்தமாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

Related posts

“எதிர்கால தேர்தல்களில் கூட்டணி இல்லை” – ஸ்ரீ.ல.சு.க

இ.தொ.கா வின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது

editor

பிரதமரிடம் இருந்து தேர்தல் குறித்து விசேட அறிக்கை