தகராறு முற்றியதால் கள்ளக்காதலன் மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (27) பகல் அங்குலான, சயுரபுர தொடர்மாடித் குடியிருப்புத் தொகுதியில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
குடாவஸ்கடுவ, வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கும் குறித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதாலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
