உள்நாடுபிராந்தியம்

களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் திருட்டு!

களுத்துறை பிரதேச சபையின் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவரின் மஹவஸ்கடுவவில் உள்ள வீட்டிலிருந்து பணம் மற்றும் 2,000 ரூபா பெறுமதியான ஒரு ஜோடி காலணிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து வடக்கு களுத்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜூலை 11 ஆம் திகதி இரவு 11.30 மணி முதல் 12 ஆம் திகதி காலை 6.00 மணி வரையான காலப் பகுதியில் இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.

களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பஹலகே ரோஷன் பிரியங்கர அபேகுணவர்தன (54) பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

மான்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் எம்.பி அருண பனாகொட வெளியிட்ட தகவல்

editor

அரசாங்க ஒத்துழைப்பு, வெளிநாட்டு நிதி உதவிகளுடன் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

மத்திய செயற்குழு கூட்டம் இரத்து – சுமந்திரன் எம்.பி

editor