சூடான செய்திகள் 1

களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது

(UTV|COLOMBO)-களுத்துறை வடக்கு, காலி வீதி, தொடுபல சந்திக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக, பிரதான சந்தேகநபர் இன்று (03) அதிகாலை, துப்பாக்கியொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி முதலாம் திகதியன்று, இரவு 10.35 மணியளவில், காலி வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றுக்கு எதிரேயுள்ள வீதியில், நபரொருவரை துப்பாக்கியால் சுட்டு தப்பியோடியமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேகநபர் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், களுத்துறை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இப்பிரதான சந்தேகநபரை கைது செய்ததாக மேலும் தெரிவித்தனர்.

Related posts

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு

எனது மின்சாரக்கட்டணம் தொடர்பில் வதந்திகளை பரப்பினால் சட்ட நடவடிக்கை – நாமல்!