வகைப்படுத்தப்படாத

களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகரை உடனடி இடமாற்றம் செய்யுமாறு கட்டளை

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் முறையான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்க வேண்டும் என்றும் தனது அமைச்சின் செயலாளருக்கு அவர் கட்டளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று முக்கிய விடயங்களைக் கருத்திற்கொண்டே அமைச்சர் இதனை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

உயிர்நீத்த படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட விகாரை புனர்நிர்மாணம்

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவன் இன்று ஓய்வுபெறவுள்ளார்

Wellampitiya copper factory worker further remanded