அரசியல்உள்நாடு

களுத்துறை அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு – பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ரிஷாட் எம்.பி

களுத்துறை அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நாள் நிகழ்வுகள், பாடசாலை அதிபர் அல்ஹாஜ் சிராப் முபஸ்சிர் தலைமையில் (14) களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன்போது, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தவிசாளர் உவைஸ் முஹம்மட், ஹைதராபாத் KIMS வைத்தியசாலையின் பணிப்பாளர் சுனில் தெஹ்ரி, களுத்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளர் ஆமிர் நாசிர், களுத்துறை உதவி பொலிஸ் அத்தியகட்சர் இனோகா லியானகே, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் நப்றாஸ் நில்பர், களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத் தலைவர் உவைன், களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளன செயலாளர் ஹிசாம் சுஹைல், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணிலின் கனவு என்னை தோல்வி அடையச் செய்வதுதான் – சஜித்

editor

பொத்துவில் அறுகம்பேயில் முஸ்லிம்களின் மபாஸா பள்ளிவாசலுக்கு அருகில் இஸ்ரேலின் சபாத் இல்லம்!

editor

உலகக்கிண்ண தோல்வி குறித்து குசல் தெரிவித்த கருத்து!