உள்நாடு

களுத்துறைக்கு 18 மணித்தியால நீர் வெட்டு

(UTV | களுத்துறை) – களுத்துறை பிரதேசத்தில் சில பகுதிகளில் இன்று(24) 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

முற்பகல் 8.00 மணி தொடக்கம் நாளை(25) அதிகாலை 2.00 மணிவரையில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, தெற்கு கழுத்துறை, வடக்கு களுத்துறை, வாத்துவை, ஹிக்கடுவை, பொதுபிடிய,மொல்லிகொட மற்றும் மொரொன்துடுவ ஆகிய பிரதேசங்களில் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளன.

களுத்துறை அல்விஸ் பிராந்திய நீர்த்தேக்க வளாகத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

தேவைக்கு ஏற்ப IMF உதவியை நாடுவோம்

வெள்ளம் மற்றும் மண்சரிவு தொடர்பான அவசர எச்சரிக்கை

editor

 2022  ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்விநடவடிக்கை இன்று ஆரம்பம்