வணிகம்

களனி புதிய பாலத்திற்கான நிர்மாணப்பணிகள் 50 வீதம் பூர்த்தி

(UTV|COLOMBO) – அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் அமைக்கப்படும் களனி புதிய பாலத்திற்கான நிர்மாணப்பணிகள் 50 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக வீதி அபிவிருததி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த இந்த பாலம் திறக்கப்பட்ட பின்னர் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

களனி பாலத்தில் இருந்து துறைமுக நகரத்திற்கு 6 நிமிடங்களிலும், பத்தரமுல்ல நிர்வாக நகருக்கு 10 நிமிடங்களிலும் மற்றும் பொரள்ளையில் அமைந்துள்ள தேசிய வைத்தியசாலைக்கு 6 நிமிடங்களிலும் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இருந்து கொழும்பில் நிலவும் வாகன நெரிசலை 50 சதவீதத்தினால் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரீலோட் பொறியிலிருந்து விடுதலை

கூகிள் நிறுவனம் Location Data; தகவல்களை பகிரவுள்ளது

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..