சூடான செய்திகள் 1

களனி பல்கலைக்கழகத்தின் கலை பீடம் ஜூன் 06 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO) ஜூன் 06 ஆம் திகதி களனி பல்கலைக்கழகத்தின் கலை பீடம்  மீண்டும் திறக்கப்படும் என களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தைமையை அடுத்து கடந்த 30 ஆம் திகதி களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்பட்டிருந்தது.

அந்நிலையில் வர்த்தக, முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பீடங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச நிறுவனங்கள் இரண்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை

இராவணா – 1 விண்வெளியில் ஏவப்பட்டது

பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் பிரதமரிடம் முக்கிய ஐந்து கோரிக்கைகள் சமர்ப்பிப்பு