உள்நாடுபிராந்தியம்

களனிக்கும் வனவாசலவுக்கும் இடையிலான ரயில் கடவையில் விபத்து – ரயில் சேவைகளுக்கும் பாதிப்பு

களனிக்கும் வனவாசலவுக்கும் இடையிலான ரயில் கடவையில் கார் ஒன்று ரயில் மீது இன்று (05) மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி சென்ற ரயிலுடனே குறித்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் கார் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பாண் விலை 100 ரூபாவை தாண்டும் சாத்தியம்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!