உள்நாடு

கல்வி மாற்றத்திற்கான மாநாட்டில் கல்வி அமைச்சர் சுசில்

(UTV |  நியூயோர்க்) – ஐக்கிய நாடுகள் சபையின் 77வது பொதுச் சபையுடன் இணைந்து அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்று வரும் கல்வி மாற்றத்திற்கான மாநாட்டில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இலங்கை சார்பில் கலந்து கொண்டார்.

உலகளாவிய கல்வி நெருக்கடிக்கு தீர்வு காண்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். இந்த மாநாட்டில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அரசுத் தலைவர்கள், கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மேலும், கல்விக்கான சர்வதேச நிதி வசதியின் (IFFEd) துவக்கமும் இங்கு நடைபெற்றது. கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கல்வியை உயர்த்த நிதி வசதிகளை வழங்குவதற்காக இது அமைந்துள்ளது.

இலங்கையின் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உண்மைகளை முன்வைத்துள்ள நிலையில், எதிர்காலத்தில் இலங்கையின் கல்வித்துறைக்கும் இந்த நிதி வசதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்

14,000 இற்கும் அதிகமான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டத்தில்!

பசிலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி