உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் நேற்றைய தினம் (02) நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவையில் இருந்து நுவரெலியாவிற்கு கல்வி சுற்றுலா சென்ற மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் .
குறித்த மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, தலைசுற்று, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர்கள் நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது
சிலர் சிகிச்சைகளுக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்னும் சில மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.