உள்நாடு

கல்வி அமைச்சினால் விஷேட ஆய்வு

(UTV – கொவிட் 19) – கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொலைதூர கல்வி முறையின் ஊடாக 60 சதவீதமான பாடசாலை மாணவர்களே சலுகைகளை பெற்றுக்கொள்வதாக கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் எவ்வித தொலைதூர கல்வி வசதிகளையும் பெற முடியாத 40 சதவீதமான மாணவர்களும் ஏதேனும் ஒரு முறைமையினூடாக கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எச்.என். சித்ராநந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை மட்டத்தில் அச்சிடப்பட்ட கற்றல் தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய கையேடுகளை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பில் மாகாணக் கல்வி அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ரிஷாத் ஒருபோதும் தீவிரவாத்தில் ஈடுபடமாட்டார் – மங்கள

உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியினர் விபரம்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் – வாக்களிப்பின்றி நிறைவேற்றம்