உள்நாடு

கல்வி அமைச்சினால் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – நாட்டில் பரவிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் தற்போதைய நிலைமையினை கருத்தில் கொண்டு இந்டவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 200 இற்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய தினம் குறித்து கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பாடசாலைகளை நடாத்திச் செல்ல முடியுமானால் வழமைபோன்று மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லையென கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் – நால்வருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

editor

மகளின் முதலிரவன்று தந்தை கைது! 9வருடத்திற்கு பின் சிக்கினார்

நீதிமன்ற நடவடிக்கைகள் ஐந்து நாட்களுக்கு மட்டு