அரசியல்உள்நாடு

கல்வியை ஆபாசமயப்படுத்தியமையே தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரே ஒரு முறைமை மாற்றமாகும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாட்டின் மிகவும் மதிப்புமிக்க வளமான பிள்ளைகளைப் பாதுகாத்து பராமரித்து, சிறந்த நிகழ்காலத்தையும் சிறந்த எதிர்காலத்தையும் அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும் அழகான எதிர்பார்புகள் ஒவ்வொரு பெற்றோர்களிடமும் காணப்படுகின்றன. இந்த அழகான எதிர்பார்புகளை உறுதி செய்வதில் அனைவரும் அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றனர்.

இந்த அழகான எதிர்பார்ப்புகளில் குறிப்பிட்ட இலக்குகளை அரசாங்கம் நிறைவேற்றித் தர வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் எதிர்பார்த்தாலும், யாராலும் திருட முடியாத, பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய வளமான கல்விக்கான உரிமையை மீறும் விதமாக தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கல்விக்கான உரிமை இன்று பிள்ளைகளின் மனதை பிறழ்வுக்குட்படுத்தும் ஒரு வகையான மோசமான நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.

கல்விச் சீர்திருத்தங்களாலும், கல்வியில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களாலும் பின்லாந்து, ஜப்பான், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட நமது நாட்டுப் பிள்ளைகளுக்கு உயர் தரத்திலான கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டாலும், இன்று மனதைக் குலைக்கும் கல்விச் சீர்திருத்தங்களே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஒழுக்கத்திற்குப் பதிலாக ஒழுக்கக்கேட்டையும், நாகரிகத்திற்குப் பதிலாக அநாகரித்தையும் ஊக்குவிக்கும் சீர்திருத்தமே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வருவதாக கூறிக்கொண்ட தற்போதைய அரசாங்கம், கல்வியில் ஆபாசத்தை புகுத்தும் முறைமை மாற்றத்தை மாத்திரமே முன்னெடுத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டம், கொலொன்ன தேர்தல் தொகுதியில் இன்று நடந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாகரிகமான நாட்டை உருவாக்கும் முறைமை மாற்றத்தையே மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று, கல்வியிலும் ஆபாசத்தைப் புகுத்தி, மக்கள் ஆணைக்கும் துரோகம் இழைத்துள்ளனர்.

இவ்வாறு கல்வியை ஆபாசத்திற்குட்படுத்தி எதிர்பார்த்த முறைமை மாற்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாத நிலையை இன்று ஏற்படுத்தியுள்ளனர். நாட்டு மக்களும் பெற்றோர்களும் கல்வியின் நிகழ்காலம் போலவே அதன் எதிர்காலம் குறித்தும் நன்கு சிந்திக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 தற்செருக்கை வைத்துக் கொண்டு இவற்றைச் செய்ய முடியாது.

தற்செருக்கு காட்டிக் கொண்டு நாட்டின் கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாது. கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் நடக்க வேண்டும்.

இப்பேற்பட்ட கலந்துரையாடல் எதுவும் முன்னெடுக்கப்படாமையினாலயே, கல்வியில் ஆபாசமும் புகுத்தப்பட்டுள்ளது. இந்த தவறு சரி செய்யப்பட வேண்டும். அடிப்படை மற்றும் மனித உரிமையான கல்வியை நாம் பாதுகாக்க வேண்டும்.

இனம், மதம், வர்க்கம், நிறம் மற்றும் கட்சி பாராது பெரியோர்கள், பெற்றோர்கள், குடிமக்களாக தமக்கு குழந்தைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்கும், சிறந்த பிரவேசம் ஊடாக கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, கட்டமைப்பு ரீதியிலான நல்ல மாற்றமொன்றை கொண்டு வருவதற்கு ஒன்றிணைய வேண்டும்.

ஒருதலைபட்சமாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்காது, பலரோடும் பேசி, கலந்துரையாடி இச்செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம் என்று என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

457 பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள கோப் குழு

editor

சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்

மாகாண சபை தேர்தல் – எந்தவொரு வேலைத்திட்டமும் இடம்பெறவில்லை – சுரேஸ் பிரேமச்சந்திரன்

editor