உள்நாடு

கல்வியாண்டு 2022 இற்கான பரீட்சை தினங்கள்

(UTV | கொழும்பு) –   கல்வியாண்டு 2022 இல் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றங்கள் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா தெரிவித்தார்.

உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்தது. இருப்பினும் இவை இரண்டு முறை பின்போடப்பட்டன.

முன்பு திட்டமிட்ட வகையில் புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22 ஆம் திகதியும், உயர்தர பரீட்சை இந்த வருடம் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கும் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி. பெரேரா கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட தேக்கமரப் பலகைகளையும், பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றிய பொலிஸார்

editor

வானிலை முன்னறிவிப்பு

பாலித தெவரப்பெரும இலங்கை அரசியலில் மனிதாபிமானியாகவும், ஜனரஞ்சக அரசியல்வாதியாகவும் பேசப்பட்டவர்