உள்நாடு

கல்வித்துறையில் புதிய சகாப்தம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

(UTV | கொழும்பு) –  2023 ஆம் ஆண்டில் நாங்கள் விடுமுறைக் காலத்தைக் குறைத்து பாடசாலை நேரத்தை அதிகரிக்கவும், அந்த ஆண்டில் அவ்வருடத்திற்கான பாடத்திட்டத்தை முடிக்கவும் முயற்சிப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் மூலம் , உயர் தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் இன்று சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து கருத்து வெளியிடும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும்
அதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் இருந்து கல்வி மாற்றத்தின் சகாப்தம் ஆரம்பிக்கும் வகையில் முதலாம் தரத்திலிருந்து அடுத்த வருடம் முதல் செயற்பாடுகளுடன் கூடிய ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி ஆரம்பிக்கப்படும் எனவும்
இவை தவிர முன்பருவத்திற்கான வேலைத்திட்டமும் அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 13000 பெண் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதுடன் பிரிட்டிஷ் கவுன்சிலும் மேலும் சில நிறுவனங்களின் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.

மேலும் , பாடசாலை உபகரணங்களுக்கான செஸ் வரியை நீக்குவது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து பல்கலைக்கழகங்களதும் மீள் ஆரம்பம் ஒத்திவைப்பு

MT NEW DIAMOND : கெப்டன் குற்றச்சாட்டினை ஏற்பு

இதுவரை 19,091 வழக்குகள் நிறைவு