உள்நாடு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு – அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் இடையீட்டு மனுதர்களான (பிரதிவாதிகள்) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோரும் அவர்கள் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவும் ஆஜரானதுடன் வழக்காளியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகினர்.

இதன்போது இருதரப்பு சட்டத்தரணிகள் குழுவும் தமது வாதப்பிரதிவாதங்களை முன்வைத்திருந்தனர்.

இருந்தபோதிலும் மேலதிக வாதங்களையும், சமர்ப்பிப்பு களையும் முன்வைக்க அடுத்த வருடம் ஜனவரி மாதம் 28ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் இடையீட்டு மனுதர்களான (பிரதிவாதிகள்) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இன்றைய வழக்கு விசாரணையின் போது பிரசன்னமாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-ஊடகப்பிரிவு

Related posts

பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை – மட்டக்களப்பு பெண்களுக்கு உடனே உதவி வழங்கிய அமைப்பு

editor

அமைச்சர் ஜீவனை கைது செய்யுமாறு நுவரெலியா நீதிமன்றம் உத்தரவு.

ஜனவரியில் அதிகமான மின்சார கட்டண குறைப்பு என்கிறார் மின்சக்தி அமைச்சர்!