கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வருடாந்த சேவை நலன் பாராட்டு விழா புதன்கிழமை (30) மாலை, மாநகர சபை கேட்போர் கூடத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.
இதன்போது கல்முனை மாநகர சபையில் மிகவும் சிறப்பாகக் கடமையாற்றி, இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களும் ஓய்வுபெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுமாக 27 பேர் நினைவு விருது வழங்கி, பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்சன், ஆயுள்வேத வைத்தியர் ஜுமானா ஹஸீன், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், தொழில் நுட்ப உத்தியோகத்தர் எம்.ஏ. நிசார், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன், நிதி உதவியாளர் யூ.எம். இஸ்ஹாக், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். டிலிட் நெளசாட், வருமானப் பரிசோதகர் சமீம் அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இதன்போது உத்தியோகத்தர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
அத்துடன் கல்முனை மாநகர சபையில் கடமையாற்றி, மரணித்த உத்தியோகத்தர்களுக்கான பிரார்த்தனையும் இடம்பெற்றது. மாநகர சபையின் வருமானப் பரிசோதகர் சமீம் அப்துல் ஜப்பார் விழா நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
-அஸ்லம் எஸ்.மெளலானா