கல்முனை மாநகர சபையின் சேவைகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஓர் அங்கமாக புதிய ட்ரக்டர் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் PSDG திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் கல்முனை மாநகர சபையின் நிதிப் பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்ட இந்த ட்ரக்டர் குறித்த நிறுவனத்தினால் இன்று வியாழக்கிழமை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் உள்ளூராட்சி உத்தியோகத்தர் சர்ஜுன் தாரிக் அலி, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், என். பரமேஸ்வர வர்மன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான வி.சுகுமார், ஏ.ஆர். நுஷைர் அஹமட், ஈ.சுதர்ஷன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். டிலிப் நெளஸாத், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் கே.ரகு உட்பட மாநகர சபை உத்தியோகத்தர் பலரும் டிமோ நிறுவனப் பிரதிநிகளும் பங்கேற்றிருந்தனர்.
-அஸ்லம் எஸ்.மெளலானா