கல்முனை பெரியநீலாவணையில் அஜா ஹோம் எனும் பெயரில் முதியோர் இல்லம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் முதியோஸ் இல்லம் ஒன்று இன்மையால் தனியார் இடமொன்றில் முதியோர் பராமரித்து வரப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கல்முனை வடக்கு பிரதேச சயெலகத்தின் ஒத்துழைப்புடன் பெரியநீலாவணை மத்திய வீதியில் அமைந்துள்ள பொதுகட்டடம் ஒன்று புனரமைக்கப்பட்டு அது தற்போது முதியோர் இல்லமாக மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கல்முiனை வடக்கு பிரதேச செயலாளர் அதிசயராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இல்லத்தை திறந்து வைத்துள்ளார். இதன்போது அஜா ஹோம் அமைப்பின் பிரதிநிதிகள், அப்பகுதி பொதுமக்கள், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.