உள்நாடு

கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிபதியாக புதிதாக கடமையேற்ற – பிரபாகரன்!

(UTV | கொழும்பு) –

கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிபதியாக புதிதாக கடமையேற்ற ரி.ஜே. பிரபாகரனை வரவேற்கும் வைபவம் இன்று கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமானதுடன் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி, கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட் றியால், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது இதில் கல்முனை அக்கரைப்பற்று சிரேஸ்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டோரு ம் கலந்து கொண்டனர்.


எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் விசேட அறிவிப்பு

editor

இலங்கை மக்களுக்காக நான் கடவுளுடன் பேசுகின்றேன் – பாதுக்கே அஜித்தவன்ச தேர்ர்

கோட்டாபய – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கலந்துரையாடல்