உள்நாடுபிராந்தியம்

கல்கிஸையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

கல்கிஸை, அரலிய வீட்டுத் திட்டப் பகுதியில் நேற்று (01) மாலை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் படுகாயமடைந்தார்.

கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த இருவர் லுனாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் கல்கிஸை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் அங்குலான பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த மோதல் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Related posts

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாடு – கொழும்பில்.

மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை, சமூக விடிவுக்கு வித்திடும் – முன்னாள் அமைச்சர் ரிஷாட்

மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு