வகைப்படுத்தப்படாத

கலிபோர்னியாவில் படகில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சன்டாகுரூஸ் தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பணியாளர்கள் உட்பட மொத்தம் 38 பேர் கொண்ட குழுவினர் குறித்த படகில் பயணித்துள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாக படகில் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கடலோரக்காவல் படையினர் சம்பவ இடம் விரைந்து படகில் பரவிய தீயை அணைக்கும் முயற்சி மேற்கொண்டனர்.

மேலும் படகில் சிக்கிய 5 பேரை உயிருடன் மீட்டுள்ளதுடன், இந்த தீ விபத்தில் சிக்கிய மேலும் 33 பேரின் நிலை என்னவென்று தெரியாததால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுக்கிறது.

Related posts

இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வர்த்தக சலுகை இரத்து

லாவோஸ் நாட்டில் அணைக்கட்டு உடைந்ததில் நுற்றுக்கணக்கானோர் மாயம்

டொனால்ட் ட்ரம்ப் தென் கொரியாவுக்கு விஜயம்