உள்நாடு

கலந்துரையாடலை அடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட்ட சுங்க அதிகாரிகள்

(UTV | கொழும்பு) –

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இலங்கை சுங்க தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட தமது வேலை நிறுத்தத்தை  கைவிட தீர்மானித்துள்ளன.

அதிகாரிகளிடம் இருந்து தமது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான பதில் கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்க அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நேற்று (03) மற்றும் இன்று (04) ‘சுகயீன விடுமுறை’யை அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தன.

சுங்க கட்டளைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளின் தன்னிச்சையான தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க உறுப்பினர்கள் இந்த வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தங்களின் கோரிக்கைகளுக்கு தேவையான தீர்வுகள் எதுவும் கிடைக்காததால் சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களாக வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு விஷேட நடவடிக்கை

பொறியியலாளர் முனாஸ், பதில் பிரதி மாகாணப் பணிப்பாளராக நியமனம்

editor

கத்தாரின் பிரபல புகைப்பட போட்டியில் இடம்பிடித்த இலங்கை இளைஞர்!